Search
Newsletter
 
Share This Story

2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா பதிலடி தரும்.. சச்சின் நம்பிக்கை

Posted by:
Updated: Wednesday, January 2, 2013, 17:47 [IST]

India Will Beat Pak 2nd Odi Sachin
 

முசெளரி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா தோற்றிருந்தாலும் கூட 2வது மற்றும் 3 போட்டிகளில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்ட சச்சின் தற்போது தனது குடும்பத்துடன் முசெளரியில் ஓய்வில் இருக்கிறார். விரைவில் ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் ஆடவுள்ளார்.

இந்த நிலையில்,அங்கு இன்று செய்தியாளர்களிடம் பேசினார் சச்சின். அப்போது அவர் பேசுகையில், நான் தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை. எனினும், எனது இதயம் எப்போதும் அணியின் மீதே இருக்கும், அனைத்து வகையிலும் நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருப்பேன்.

நாளை நடைபெறும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி நிச்சயமாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் சச்சின்.

Story first published:  Wednesday, January 2, 2013, 17:40 [IST]
English summary
India will beat Pak in 2nd ODI, says Sachin Tendulkar.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil