ஜாம்ஷெட்பூர்: இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புதுமுக வீரர் சமி அகமதுவுக்கு அவரது சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான 3-வது ஒரு நாள் போட்டியில் 9 ஓவர்களை வீசிய சமி அகமது 4 மெய்டன் ஓவர்களுடன் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து தம்மை சிறந்த இளம் பந்து வீச்சாளராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மொரதாபாத் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு நேற்று இரவு சென்றடைந்தார். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அவரை உற்சாகமாக வரவேற்றனர். அவரது வீட்டிலும் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.










