ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ராஜ்கோட் எஸ்.பி. பிரேம்வீர் சிங் கூறுகையில், 4 எஸ்.பிகள், 25 டி.எஸ்.பிகள் உட்பட 1300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டியை பதிவு செய்ய 500 பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருநாட்டு அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் 125 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ராஜ்கோட் மைதான செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், மைதானத்தில் போட்டியை இடையூறு இல்லாமல் பார்ப்பதற்காகவே எந்தத் தடுப்பும் போடப்படவில்லை. ரசிகர்களைக் கண்காணிக்க 40 சிசிடிவி காமிராக்கள் மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.










