Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
 
Share This Story

தென்னாப்பிரிக்கா செல்லும் பாக். அணியின் கேப்டனான மிஸ்பா உல் ஹக் நீடிப்பு!

Posted by:
Published: Friday, January 11, 2013, 13:29 [IST]

தென்னாப்பிரிக்கா செல்லும் பாக். அணியின் கேப்டனான மிஸ்பா உல் ஹக் நீடிப்பு!
 

கராச்சி: தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளுக்கு கேப்டனாக மிஸ்பா உல் ஹக் நீடிப்பார் என்று தெரியவந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற இந்தியாவுடனான போட்டிகளில் சீனியரான மிஸ்பா உல் ஹக் அப்படி ஒன்றும் சோபிக்கவில்லை! ஜாம்ஷெட்தான் அந்த அணிக்கு தூணாக திகழ்ந்தார். கடந்த ஆண்டுகூட மிகவும் மெதுவாக ரன் எடுக்கிறார் என்பதாலேயே 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து மிஸ்பா உல் ஹக் நீக்கப்பட்டார்.

இருப்பினும் தென்னாப்பிரிக்கா செல்லும் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு மிஸ்பா உல் ஹக்கையே கேப்டனாக நீடிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் முகமது ஹபீஸ், 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக நீடிக்கிறார்.

வரும் 20-ந் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது

English summary
The Pakistan Cricket Board has decided to retain senior batsman Misbah-ul-Haq as captain for the Test and one-day series in the forthcoming tour of South Africa.

Please read our comments and moderation policy before posting

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil