Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நியூசி. க்கு எதிரான டெஸ்ட் தொடர்: 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது தெ.ஆப்பிரிக்கா!

Posted by:
Published: Tuesday, January 15, 2013, 8:19 [IST]
 

நியூசி. க்கு எதிரான டெஸ்ட் தொடர்: 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது தெ.ஆப்பிரிக்கா!
 

போர்ட் எலிசபெத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 20 ஓவரை 2-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 1 இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்களில் வென்றது.

2-வது போட்டி போர்ட் எலிசெபத்தில் நடைபெறு வந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா தமது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 525 என்ற இமாலய ஸ்கோரை எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்தோ 121 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பாலோ ஆன் ஆகி 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றும் தொடர்ந்த நியூசிலாந்தின் 2-வது இன்னிங்சில் அந்த அணியால் மொத்தமே 211 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 193 ரன்களில் தோல்வியைத் தழுவ தென்னாப்பிரிக்காவோ 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது!

2 இன்னிங்சிலும் 8 விக்கெட் வீழ்த்திய ஸ்டென் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

2 அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது.

English summary
South Africa completed a 2-0 series win over New Zealand on Monday after thumping the visitors by an innings and 193 runs on the fourth day of the second test.
கருத்தை எழுதுங்கள்