Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
 
Share This Story

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Posted by:
Updated: Tuesday, January 15, 2013, 19:06 [IST]

கொச்சி: கொச்சியில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது!.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய அணி வெற்றி பெற 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி வீரர்கள் பொறுப்போடு ஆடி இந்த ரன்னை சேஸிங் செய்து வந்தனர். ஆனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கடைசிவரை போராடி தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

இந்தியா

இதைத் தொடர்ந்து 2-வது ஒருநாள் போட்டி கொச்சி நேருவிளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க வீரரான ரஹானே 3.6வது ஓவரில் 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் 4.3 -வது ஓவரில் கம்பீர் அவுட் ஆக அதிர்ச்சி அடைந்தது இந்தியா. அப்போது இந்திய அணி 18 ரன்களைத்தான் எடுத்திருந்தது.

டோணி அபாரம்

பின்னர் களமிறங்கிய கோஹ்லியும் யுவராஜ்சிங்கும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்கு சற்று ஆறுதல் கிடைத்தது. 54 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களை கோஹ்லி எடுத்தார். அவருடன் கை கோர்த்த யுவராஜ்சிங் 37 பந்துகளில் 32 ரன்களைக் குவித்து அபாரமாக ஆடினார். கோஹ்லி வெளியேறும் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ரெய்னாவும் கேப்டன் டோணியும் இணைந்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரெய்னா 78 பந்துகளில் 55 ரன்களையும் கேப்டன் டோணி 66 பந்துகளில் 72 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர்.

49.2-வது ஓவரில் இந்திய அணி 270 ரன்கள் எடுத்த நிலையில் டோணி அவுட் ஆனார். அவருக்குப் பிறகு விளையாடிய இளம் வீரர்கள் 15 ரன்களை எடுத்து மொத்தம் 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களைக் குவித்தனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து வெல்ல 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இங்கிலாந்தின் பின், டென்பெர்க் தலா 2 விக்கெட்டுகளும் ஓக்ஸ், ட்ரெட்வெல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்களாக கேப்டன் குக், பெல் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் முதல் அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சமி அகமது வீசிய பந்தை பெல் அடிக்க டோணி கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். 1.2 ஓவது ஓவரில் 4 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி தமது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி சுதாரித்துக் கொண்டு விளையாடத் தொடங்கியது.

 

இங்கிலாந்து தடுமாற்றம்

முதல் ஒருநாள் போட்டியைப் போலவே பந்துகளை வீணாக்காமல் ரன்களைச் சேர்ப்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். ஆனால் கேப்டன் குக் நீண்ட நேரம் நிற்கவில்லை. 10 ஓவரில் குக் அவுட் ஆனார். அவர் 27 பந்துகளில் 17 ரன்களைத்தான் எடுத்திருந்தார். அப்போது இங்கிலாந்து 58 ரன்களை எடுத்திருந்தது.

தோல்வி முகம்

அடுத்த 4வது ஓவரில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 14.2-வது ஓவரில் பீட்டர்சனும் 14.4-வது ஓவரில் மோர்கனும் அவுட் ஆகினர். பீட்டர்சன் 44 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். மோர்கன் டக் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்திருந்தது. 30-வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 36 வது ஓவரில் இங்கிலாந்து அணி 158 ரன்களை எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது! இந்தியாவின் அஸ்வின், புவனேஷ்வர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

 

Story first published:  Tuesday, January 15, 2013, 8:42 [IST]
English summary
Nothing seems to be going right for Mahendra Singh Dhoni and his men as after their 1-2 series loss in the three-match ODI series against Pakistan, India again started on the wrong foot against England last Friday. The Indians will have to give a serious thought to the team composition as another defeat may put immense pressure on the team and may make it very difficult to stage a comeback

Please read our comments and moderation policy before posting

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil