Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா… 3வது ஒருநாள் போட்டியில் 157 ரன் எடுத்து வெற்றி…

Posted by:
Updated: Saturday, January 19, 2013, 18:23 [IST]
 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா… 3வது ஒருநாள் போட்டியில் 157 ரன் எடுத்து வெற்றி…
 

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிகவும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கியது.

டாஸ் ஜெயித்த இந்திய அணியினர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியினரால் இந்திய அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 155 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார். 3 பேர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். இந்தியவீரர் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இசாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். புவனேஸ்குமார், ஷாமி அகமது, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்திய அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

கேப்டன் தோனி முதல் முறையாக தனது சொந்த ஊரில் நடைபெறும் போட்டியில் விளையாடினார் என்பதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு உருவானது. கடந்த சில போட்டிகளில், தோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் இங்கிலாந்தை வீழ்த்தியது தோனி தலைமையிலான இந்திய அணி. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 156 ரன்களை 28.1 ஓவரில் எளிதாக அடித்து வெற்றி பெற்றனர்.

முதலில் பேட் செய்த கவுதம் கம்பீர் 53 பந்தில் 4 பவுண்ட்ரிகளை அடித்து 33 ரன்களை எடுத்தார். பின்னர் ட்ரட்வெல்லின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு முன்னதாக ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் 4 பந்துகளில் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.

இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் களம் இறங்கிய விராட் கோஹ்லி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 79 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். இதில் 2 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். அவருடன் ஜோடியாக ஆடியாக யுவராஜ் சிங் 21 பந்துகளில் 30 ரன்களை அதிரடியாக குவித்தார். 6 பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினால் ஆனால் அவரும் ட்ரெட்வெல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அவருக்குப்பின்னர் வந்த தோனி கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார். 12 பந்துகளில் 10 ரன்களை எடுத்த தோனி தன்பங்குக்கு 2 பவுண்டரிகளை விளாசினார். இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 156 ரன்களை எளிதில் எட்டியது. 28.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இங்கிலந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2க்கு1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Saturday, January 19, 2013, 15:32 [IST]
English summary
England are bowled out for 155 in 42.2 overs after being put into bat by India in the 3rd one-day international at the new JSCA stadium in Ranchi on Saturday.
கருத்தை எழுதுங்கள்