Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தாமதமான பந்து வீச்சு- தென்னாப்பிரிக்கா கேப்டன் வில்லியர்ஸ் சஸ்பென்ட்

Posted by:
Published: Sunday, January 20, 2013, 15:54 [IST]
 

தாமதமான பந்து வீச்சு- தென்னாப்பிரிக்கா கேப்டன் வில்லியர்ஸ் சஸ்பென்ட்
 

டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தாமதாக பந்து வீசியதற்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா இடையேயான நேற்றைய போட்டியில் மிகவும் தாமதமாக பந்துவீசியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென்னாப்பிரிக்கா கேப்டன் வில்லியர்ஸுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டது. இதை அவரும் ஒப்புக் கொண்டதால் இது தொடர்பாக கூடுதல் விசாரணைகள் நடத்தப்படவில்லை.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவருக்கும் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் வில்லியர்ஸ் விளையாடமாட்டார்.

English summary
South Africa captain AB de Villiers has been suspended for two ODIs while his players have been fined 100 per cent of their match fees for maintaining a slow over-rate during their one-wicket defeat against New Zealand in the first ODI in Paarl on Saturday, ICC said in a media release on Sunday.
கருத்தை எழுதுங்கள்