Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ராஞ்சி வெற்றியைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியா!

Posted by:
Published: Sunday, January 20, 2013, 13:40 [IST]
 

ராஞ்சி வெற்றியைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியா!
 

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்த இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது.

இங்கிலாந்து அணி 118 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

4-வது இடத்தில் இலங்கை, 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா, 6-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளன.

மேற்கிந்திய தீவுகள் - 7வது இடம், வங்கதேசம்- 8வது இடம், நியூசிலாந்து- 9 வது இடம், ஜிம்பாப்வே 10-வது இடத்தைப் பிடித்துள்ளன.

English summary
India claimed the top spot in the ICC ODI rankings after their win over England in Ranchi coupled with South Africa’s loss to New Zealand later in the day
கருத்தை எழுதுங்கள்