Search
Newsletter
 
Share This Story

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி: ஆஸி. அணியில் ஷான் மார்ஷ் மீண்டும் சேர்ப்பு

Posted by:
Published: Monday, January 21, 2013, 14:45 [IST]

Shaun Marsh Returns Australia T20 Squad
 

மெல்போர்ன்: இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இலங்கை அணியுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 26-ந் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. 2-வது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டி ஜனவரி 28-ல் மெல்போர்னில் நடைபெற் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் 20 ஓவர் அணிக்கு ஜார்ஜ் பெய்லி கேப்டனாக நீடிப்பார். அந்த அணியில் டேவிட் ஹஸி நீக்கப்பட்டு ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பிக்பாஷ் லீக் போட்டிகளில் அதிகபட்ச ரன்களைக் குவித்திருந்தார் மார்ஷ். மேலும் பிக்பாஷ் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆரோன் பிஞ்ச், ஹோக்ஸ், ஜேம்ஸ் பால்க்னெர், லாக்லின் உள்ளிட்டோரும் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

English summary
Australia on Monday recalled left-hander Shaun Marsh for the two Twenty20 Internationals against Sri Lanka while the selectors dropped David Hussey. George Bailey will continue to captain the side.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil