Search
Newsletter
 
Share This Story

நாளை இந்தியா- இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி!

Posted by:
Published: Saturday, January 26, 2013, 12:47 [IST]

India Vs England 5th Odi Cricket Fever Grips Dharamsala
 

தர்மசாலா: இந்தியாவில் சுற்று பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணியுடனான கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹிமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து அணியுடன் 4 ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஒரு போட்டியில் மட்டும் இங்கிலாந்து வென்றது. மற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. தற்போது 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.

இரு அணிகளும் மோதும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்திய அணியின் தொடர் வெற்றியை ரசிகர்கள் ஆஅலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இப்போட்டியில் கையில் காயத்துடன் இருக்கும் நிலையிலும் டோணி விளையாட இருக்கிறார். தர்மசாலாவில் முதல் முறையாக சர்வதேச போட்டி நடக்கிறது. மலை பகுதியான அங்கு குளிர் அதிகமாக இருக்கும். இதனால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று தெரிகிறது. நாளைய போட்டி பகல் ஆட்டமாக நடக்கிறது. காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதனிடையே இன்று தர்மசாலாவில் உள்ள திபெத்திய மடத்தை இங்கிலாந்து வீரர்கள் பார்வையிட்டனர்.

English summary
Dharamsala is gripped with cricket fever as Team India and England arrived here for the fifth and final One Day International (ODI) match scheduled to be held here on January 27.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil