Search
Newsletter
 
Share This Story

இந்தியா வருகை தரும் ஆஸ்திரேலியா 'டெஸ்ட்' கிரிக்கெட் அணி அறிவிப்பு

Posted by:
Published: Thursday, January 31, 2013, 12:35 [IST]

Australia Name 17 Man Test Squad India Tour
 

டெல்லி: இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 22-ந்தேதி நடைபெறுகிறது.2-வது டெஸ்ட் ஹைதராபாத்திலும், 3-வது டெஸ்ட் மொகாலியிலும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லியிலும் நடைபெற உள்ளது

இந்த போட்டிகளில் பங்கேற்க கிளார்க் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா இன்று அறிவித்திருக்கிறது. கிளார்க், வாட்சன்,எட்கோவன், வார்னர், ஹியூக்ஸ், மேத்யூ வாடே, மேக்ஸ்வெல், மைக்கேல் ஜான்சன், பீட்டர் சிடில், ஸ்டார்க், நாதன் லயன், ஹென்ரிக்ஸ், பேட்டின்சன், டோகர்ட்டி, ஜேக்சன் பேடு, உஸ்பான் குவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்களும் 5 வேகப்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

English summary
Australia have named a 17-man Test squad to tour India next month. Michael Clarke will lead the side while Shane Watson will be his deputy.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil