Search
Newsletter
 
Share This Story

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக மீண்டும் டெண்டுல்கர்!

Posted by:
Updated: Monday, February 4, 2013, 14:55 [IST]

Ipl 6 Sachin Tendulkar Set Return As Mumbai Indians
 

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்க உள்ளது. இவற்றுக்கான வீரர்கள் இன்று ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்பஜன்சிங் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான கேப்டனாக சச்சின் டெண்டுல்கரையே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010 வரை கேப்டனான சச்சின் டெண்டுல்கர் இருந்து வந்தார். ஆனால் 2010ஆம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதால் அவர் பதவி விலகினார்.

தற்போது மீண்டும் டெண்டுல்கர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு புது உத்வேகம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Story first published:  Sunday, February 3, 2013, 12:19 [IST]
English summary
Batting stalwart Sachin Tendulkar is likely to be re-instated as the skipper of Mumbai Indians for IPL 6.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil