Search
Newsletter
 
Share This Story

பாகிஸ்தானை 49 ரன்களில் சுருட்டி அமுக்கிய தென்னாப்பிரிக்கா

Posted by:
Published: Sunday, February 3, 2013, 11:14 [IST]

Pakistan Out 49 Their Lowest Score In Tests
 

ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானை 49 ரன்களுக்குள் சுருட்டியது தென்னாப்பிரிக்கா அணி.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், இரண்டு 20 ஓவர், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பரிக்கா அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

2-வது நாள் ஆட்டம் அப்படி இருக்கும் என்று பாகிஸ்தான் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து மொத்தமே 49 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அசார் அலியின் 13 ரன்கள்தான் அதிக ரன்களாகும்.

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் வரலாற்றில் அந்த அணி எடுத்திருக்கும் மிகக் குறைந்தபட்ச ரன்கள் இது. தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

English summary
Pakistan were reduced to their lowest total in Test history as South Africa bundled out visitors for 49 on the second day of first Test.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil