Search
Newsletter
 
Share This Story

இரானி போட்டியில் சதம்- டெஸ்ட் போட்டியில் ‘விளையாட’ முரளிவிஜய்க்கு வாய்ப்பு கிடைக்குமா?

Posted by:
Published: Thursday, February 7, 2013, 17:22 [IST]

Irani Cup Murali Vijay Scores Ton
 

மும்பை: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்திருக்கும் முரளி விஜய், இந்திய டெஸ்ட் அணியில் ‘விளையாட' வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. ரஞ்சிக் கோப்பை சாம்பியன் அணியான மும்பையுடன் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி விளையாடி வருகிறது. ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரர் முரளி விஜய் அபாரமாக விளையாடி 116 ரன்களைக் குவித்தார்.

இரானி கோப்பையில் தாம் சதமடித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த முரளி விஜய், 40 முறை ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கு எதிராக சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எனது ஆட்டத்தின் மேம்பாடு அதிகரித்து உள்ளது. இந்திய அணியில் மாற்று தொடக்க வீரராக இருப்பது சவாலானது. 3 ஆட்டத்தில் விளையாடாமல் அமர்ந்து இருப்பது என்பது கடினமாகவே இருக்கும். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக ஆட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணிக்கு முரளி விஜய் தேர்வாகியிருந்த போதும் ‘விளையாட' வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது சதமடித்திருக்கும் முரளி விஜய்ய்யை டோணி பயன்படுத்துவாரா?

English summary
Virender Sehwag's upset stomach, Shardul Thakur's poor line and length, Murali Vijay's timely century and Abhishek Nayar's fighting spirit made the opening day of the Irani Cup tie, between Ranji champions Mumbai and Rest Of India (ROI), an exciting affair at the Wankhede on Wednesday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil