English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட்... இறுதிப் போட்டியில் ஆஸி.

Posted by:
Published: Sunday, February 10, 2013, 16:17 [IST]
 

மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட்... இறுதிப் போட்டியில் ஆஸி.
 

மும்பை: மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடந்த 2வது சூப்பர் சிக்ஸ் போட்டியில் அந்த அணி இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இலங்கை வீராங்கனைகள் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 131 ரன்களை மட்டுமே குவித்தனர். பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலிய அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பெறும் தொடர்ச்சியான 5வது வெற்றியாகும் இது.

தொடக்க ஆட்டக்காரர்களான மெக் லேனிங்கும், ராச்சேல் ஹெய்ஸும் எடுத்த எடுப்பிலேயே அதிரடிக்குத் தாவினர். ஒவ்வொரு பந்தையும் ரன்னாக்கினர்.இருவரும் இணைந்து 55 ரன்களைச் சேர்த்தனர். ஹெய்ன்ஸ் தொடர்ந்து சிறப்பாகஆடி 71 ரன்களைக்க ுவித்தார்.லேனிங் 37 ரன்களை எடுத்தார்.

முன்னதாக ஆடிய இலங்கைத் தரப்பில் அதிகபட்சமகா தீபிகா ரனசிங்கே 43 ரன்கள் எடுத்தார்.அவருடன் திலானி மனோதரா சற்றே சிறப்பாக ஆடி 21 ரன்கள் சேர்த்தார். இருவரும் பந்துகளை அதிகம் சாப்பிட்டாலும் மகா பொறுமையுடன் ஆடியதால்தான் இலங்கை அணியால் 100 ரன்களை தாண்ட முடிந்தது.

English summary
Five-time champions Australia entered the final of the ICC Women's World Cup after thrashing Sri Lanka by nine wickets in their second Super Six match at the Brabourne Stadium in Mumbai on Sunday. In reply to Sri Lanka's paltry 131, Australia chased down the target in just 22.2 overs. This was Australia's fifth successive victory in the tournament.

Please read our comments and moderation policy before posting

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil