Search
Newsletter
 
Share This Story

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மேத்யூஸ் நியமனம்!

Posted by:
Published: Friday, February 15, 2013, 10:54 [IST]

Mathews Named Sri Lankas Test Odi
 

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான புதிய கேப்டனாக மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 8-ல் தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான புதிய கேப்டனாக மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் 20 ஓவர் போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக தினேஷ் சன்டிமால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்று இருந்த சமரவீரா, பரனவிதனா, விக்கெட் கீப்பர் பிரசன்ன ஜெயவர்த்தனே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜந்தா மென்டிஸ் டெஸ்ட் அணிக்கு தேர்வாகியிருக்கிறார்..அஷென் சில்வா, கிதுருவான் விதனாஜ், துஷ்மாந்தே சமீரா, தாரிந்து கவுஷல் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் இதுவரை விளையாடாத குஷால் ஜனித் பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

English summary
All rounder Angelo Mathews has been appointed Sri Lankas Test and ODI captain, replacing Mahela Jayawardene, for a period of one year.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil