மெல்போர்ன்: இந்திய அணியில் கெளதம் கம்பீர் இல்லாதது, ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சாதகமானதாகும் என்று முன்னாள் வீரர் மாத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மெல்போர்ன் நகரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் கம்பீர் இல்லாதது நமக்கு் சாதகமானது. இது நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல செய்திதான்.
வீரேந்திர ஷேவாக்குடன் இணைந்து நல்ல தொடக்கத்தைக் கொடுக்கக் கூடியவர் கம்பீர். அவர் சேர்க்கப்படாததால் இந்தியாவுக்குத்தான் பின்னடைவாகும். எனவே ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கும் இது நிம்மதியான விஷயம்தான்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நன்கு விளையாடக் கூடிய வீரர் கம்பீர். அதிலும் அவரும் ஷேவாக்கும் இணைந்து பார்ம் ஆகி விட்டால் பிரிப்பது கடினம். அப்படிப்பட்ட இணை இல்லாமல் போயிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமானதே என்றார் ஹெய்டன்.










