Search
Newsletter
 
Share This Story

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய ஆஸி. மகளிர் அணி! 6-வது முறை உலக சாம்பியன்!

Posted by:
Updated: Monday, February 18, 2013, 9:49 [IST]

மும்பை: மும்பையில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் இறங்கியது. ஹெய்ன்ஸ் 52, கேமரூன் 75 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஓரளவு சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணீல் குவின்டைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

women storm home cricket s world cup

இதையடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியால் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

Story first published:  Monday, February 18, 2013, 9:35 [IST]
English summary
AUSTRALIA'S women cricketers have stormed to a sixth World Cup victory in India with an awesome display of bowling that demolished West Indies' powerhouse batters and elevated 22-year-old pace bowler Ellyse Perry to almost certain pin-up status.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil