Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னையில் நாளை டெஸ்ட் போட்டிக தொடக்கம்- ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

Posted by:
Published: Thursday, February 21, 2013, 14:00 [IST]
 

சென்னையில் நாளை டெஸ்ட் போட்டிக தொடக்கம்- ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
 

சென்னை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு 4 போட்டிகளிலும் தோற்கடித்த ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்கமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு கிளார்க் கேப்டனாக இருக்கிறார். இரண்டு அணி வீரர்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருக்கிறது.

இதேபோல் ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும் கேவலமான தோல்வியைச் சந்தித்தது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியும் இந்தியாவுக்கு உண்டு. காம்பீருக்கு பதில் முரளி விஜய் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பிறகு அவர் விளையாடும் முதல் டெஸ்ட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. டெண்டுல்கரைப் பொருத்தவரையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகுந்த சவாலானாது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்த தொடர் முக்கியமானது.

புஜாரா, வீராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகிய மிடில் வரிசை வீரர்களும் கேப்டன் டோணியும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.

இந்திய அணியில் பந்துவீச்சில் ஜடேஜா இருப்பதால் டோணி சுழற்பந்து வீரர்களுடன் ஆடலாம். அஸ்வின், ஓஜா இருப்பினும் அனுபவம் வாய்ந்த ஹர்பஜன்சிங்குக்கு 100-வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் ஓஜா இல்லாமல் போகலாம். இந்தியாவின் ஸ்பின் பந்து வீச்சுதான் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கலாம். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, அசோக் திண்டா, புதுமுக வீரர் புவனேஸ் ஆகியோர் இருந்தாலும் இதில் அதிகபட்சமாக இருவர் இடம்பெறலாம்.

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரையில் கடந்த 40 ஆண்டுகளில் ஒருமுறை தான் இந்தியாவில் தொடரை கைப்பற்றியுள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடரிலும் தோற்றது. இதனால் தற்போது தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

English summary
The four-Test series between India and Australia starting on Friday features two formerly dominant sides of the past decade who are now going through a transition period. Both teams have a lot at stake and would look to demonstrate a strong showing in the first Test starting from February 22 to set the tone for the rest of the serie
கருத்தை எழுதுங்கள்