Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சவுரவ் கங்குலியின் தந்தை திடீர் மரணம்

Posted by:
Published: Friday, February 22, 2013, 10:26 [IST]
 

சவுரவ் கங்குலியின் தந்தை திடீர் மரணம்
 

கொல்கத்தா: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் தந்தை சண்டிதாஸ் கங்குலி கொல்கத்தாவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தார் சண்டிதாஸ். அவருக்கு நிரூபா என்ற மனைவியும், ஸ்னேஹஷிஷ் மற்றும் கங்குலி என இரு மகன்கள் உள்ளனர்.

அவருக்கு கடந்த சில மாதங்களாக சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரித்தது. இதையடுத்து வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து பிர்லா இருதய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.

அவரது உடல் கொல்கத்தா கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார் சண்டிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: ganguly, கங்குலி
English summary
Former India captain Sourav Ganguly's father Chandidas Ganguly on Thursday (February 21) passed away after a prolonged illness. He was 73 and is survived by wife Nirupa and two sons, first-class cricketer Snehasish and Sourav. Ganguly senior was seriously ill with high blood sugar and was given insulins regularly while being treated at home.
கருத்தை எழுதுங்கள்