Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: இன்னும் பார்மில் இருக்கேன்.. நிரூபித்த சச்சின்!

Posted by:
Updated: Saturday, February 23, 2013, 17:44 [IST]
 

சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: இன்னும் பார்மில் இருக்கேன்.. நிரூபித்த சச்சின்!
 

சென்னை: சென்னையில் நடைபெற்றும் வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான இன்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது. ஒருநாள் போட்டி ஓய்வுக்குப் பின்னர் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 71 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக கோவனும் வார்னரும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 64 ரன்களை எடுத்திருந்த நிலையில் கோவன் ஆட்டமிழந்தார். பின்னர் களத்தில் இருந்த வார்னருடன் ஹியூஸ் கை கோர்த்தார். ஆனால் அவர் நிலைத்து ஆடவில்லை.வாட்சன், வார்னர் அடுத்தடுத்து வெளியேறினர். 47-வதுஓவரில் 153 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணிக்கு கிளார்க்கும் ஹென்ரிக்ஸும் கை கொடுத்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது.

இன்று காலை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கிளார்க் 130 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் ஸ்டார்க், சிட்டில் ஆகியோரும் ஆட்டம் இழந்து வெளியேற கடைசி விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இறுதியில் அஸ்வின், லையனை வெளியேற்றி இந்த இன்னிங்ஸில் 7 வது விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 380 ரன்களை எடுத்தது. ஜடேஜா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தமது இரண்டு தொடக்க வீரர்களையும் 6 ஓவர்களுக்குள் இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் புஜாரா இருந்தார். அவருடன் சச்சின் டெண்டுல்கர் கை கோர்த்தார். 5.2 ஓவர்களில் 12 ரன்களை எடுத்த இந்திய அணியை இருவரும் அசராமல் நின்று ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இந்திய அணி 105 ரன்களை எட்டிய போது புஜாரா அவுட் ஆனார். அவர் 44 ரன்களை எடுத்தார்.

பின்னர் டெண்டுல்கருடன் இணைந்த கோஹ்லியும் அசராமல் ரன் குவிப்பில் இணைந்தார். இருவரும் நிலைத்து ஆடினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்திருக்கிறது. சச்சின் 71 ரன்களுடனும் கோஹ்லி 50 ரன்களுடனும் நிலைத்து நிற்கின்றனர்.

விமர்சனங்களுக்கு இடையே ஒருநாள் போட்டிக்களில் இருந்து விலகுவதாக ஓய்வை சச்சின் அறிவித்த பிறகு பங்கேற்கும் முதல் டெஸ்ட்டில் தமது பலே பார்மை சச்சின் சதத்தை நோக்கி வெளிப்படுத்தியிருக்கிறார்.!

Story first published:  Saturday, February 23, 2013, 15:11 [IST]
English summary
Australia were all out on 380 runs on the morning of the second day of the first Test against India in Chennai on Saturday.
கருத்தை எழுதுங்கள்