Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஹைதராபாத்தில் நாளை 2-வது டெஸ்ட் - இந்தியாவின் அபாரம் தொடருமா?

Posted by:
Published: Friday, March 1, 2013, 14:29 [IST]
 

ஹைதராபாத்தில் நாளை 2-வது டெஸ்ட் - இந்தியாவின் அபாரம் தொடருமா?
 

ஹைதராபாத்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியைப் போலவே இந்தியாவின் அபாரம் தொடருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி தமது பழிதீர்க்கும் படலத்தை நாளை ஹைதராபாத்தில் நடைபெறப் போகும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் அரங்கேற்றுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின்தான் அதிகபட்சமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நம்பிக்கையோடு களம் இறக்கப்பட்ட ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளைத்தான் எடுத்திருந்தார். அனேகமாக நாளை போட்டியில் ஹர்பஜனுக்குப் பதிலாக ஓஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

இதேபோல் தொடக்க வீரர்களாக இறங்கிய ஷேவாக்கும் முரளி விஜய்யும் ரொம்பவே ஏமாற்றிவிட்டனர். இதனால் முரளி விஜய்க்குப் பதிலாக ஷிகார் தவான் இறக்கப்படலாம். அப்படி இறக்கப்பட்டால் அவர் அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாக இருக்கும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் டோனி நல்ல நிலையில் உள்ளார். சேப்பாக்கத்தில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். டெண்டுல்கர், கோஹ்லி, புஜாரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா ஒரே ஒரு சுழற்பந்து வீரரான லயனை மட்டும் வைத்து ஆடியது. இந்த டெஸ்டில் கூடுதலாக இன்னொரு சுழற்பந்து வீரரான டோகர்ட்டியை சேர்க்கலாம். கேப்டன் கிளார்க் மட்டுமே பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். இதனால் மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் போராட வேண்டிய நிலை இருக்கிறது.

ஹைதராபாத்தில் அண்மையில் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

English summary
The morale-boosting win clinched in the opening Test, a confident India will look to consolidate their position by putting up another dominant performance in the second cricket Test against Australia starting here tomorrow.
கருத்தை எழுதுங்கள்