Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஹைதராபாத்தில் 2வது டெஸ்ட்: ஆஸி. முதல் இன்னிங்ஸில் 237/9- திடீர் டிக்ளேர்! இந்தியா 5/0!

Posted by:
Updated: Saturday, March 2, 2013, 17:02 [IST]
 

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருக்கிறது

இந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று காலை போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.,தொடக்க வீரர்களாக வார்னரும் கோவனும் களத்தில் இறங்கினர். 2.2 ஆவது ஓவரில் அந்த அணி 10 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அதிரடி ஆட்டக்காரரான வார்னர் 6 ரன்கள் எடுத்த நிலையில்புவனேஷ்குமார் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து 4.2-வது ஓவரில் கோவனும் புவனேஷ்குமார் பந்தில் அவுட் ஆனார். கோவன் 4 ரன்கள்தான் எடுத்திருந்தார். களத்தில் இருந்த ஹியூக்ஸுடன் கை கோர்த்த வாட்சன் அதிரடியாக ஆடி வந்தார். அவரையும் புவனேஷ்குமார் வெளியேற்றி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஹியூக்ஸும் சொற்ப ரன்களில வுட் ஆனார். பின்னர் வாடேவுடன் கை கோர்த்த ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடினர். இருவரும் அணியின் ஸ்கோரை 200ஐ தாண்ட வைத்தனர். அந்த அணி 208 ரன்கள் எடுத்த நிலையில் வாடே அவுட் ஆனார். அதன் பின்னர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் சரிந்தன. 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா. களத்தில் இரண்டு வீரர்கள் அவுட் ஆகாமல் நின்றிருந்த நிலையில் திடீரென ஆஸ்திரேலியா அணி கேப்டன் கிளார்க் டிக்ளேர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த மொத்தம் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை எடுத்திருந்தது.

இந்திய அணியின் புவனேஷ்குமார், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் புவனேஷ்குமார் அபாரத்தைக் காட்ட பின்பகுதியில் ஜடேஜா ஜொலித்தார்.

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. முரளி விஜய்யும் சேவாக்கும் களத்தில் இறங்கினர். 3 ஓவர்கள் வீசப்பட்டு இந்திய அணி 5 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Story first published:  Saturday, March 2, 2013, 10:05 [IST]
English summary
Australian skipper Michael Clarke won the toss and elected to bat in the second cricket Test against India at Rajiv Gandhi Stadium in Hyderabad on Saturday.
கருத்தை எழுதுங்கள்