Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணியிலிருந்து வீரேந்திர ஷேவாக் திடீர் நீக்கம்

Posted by:
Updated: Thursday, March 7, 2013, 16:03 [IST]
 

மும்பை: சுத்தமாக பார்மில் இல்லாத தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆடி வருகிறது. இதில் சென்னை, ஹைதராபாத்தில் நடந்த போட்டிகளில் இந்தியா சிறப்பான வெற்றிகளைப் பெற்றது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் தொடரை வெல்லலாம்.

இந்த நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளுக்கான அணியை தேர்வாளர்கள் குழு இன்று அறிவித்தது. இதில் ஷேவாக் மட்டும் நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணியிலிருந்து வீரேந்திர ஷேவாக் திடீர் நீக்கம்
3வது டெஸ்ட் போட்டி மார்ச் 14ம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. இறுதி போட்டி டெல்லியில் மார்ச் 22ம் தேதி தொடங்கும்.

கடந்த சில தொடர்களாகவே ஷேவாக் சரியாக ஆடவில்லை. கடந்த 9 இன்னிங்ஸ்களாக அவர் தடுமாறி வருகிறார். ரன் குவிக்க சிரமப்படுகிறார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் போட்டார் அவ்வளவுதான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தற்போதைய தொடரில் அவர் 3 இன்னிங்ஸ்களில் மொத்தமே 27 ரன்கள்தான் எடுத்துள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் ஷேவாக் நீக்கப்பட்டிருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியிலேயே நீக்கப்பட்டுள்ளார்.

ஷேவாக் நீக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதில் ஷிகார் தவன் அல்லது அஜிங்கியா ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம் என்று தெரிகிறது. இன்னொரு தொடக்க ஆட்டக்காரராக முரளி விஜய் இருப்பார்.

இந்திய அணி - டோணி, ஷிகார் தவன், முரளி விஜய், சட்டேஸ்வர் புஜாரா, சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா,விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், பிரக்யான் ஓஜா, அஜிங்கியா ரஹானே, ஹர்பஜன் சிங், ஆர்.அஸ்வின், அசோக் திண்டா.

Story first published:  Thursday, March 7, 2013, 13:39 [IST]
English summary
Out-of-form Virender Sehwag has been dropped from India Test squad for the final two Tests against Australia. The selectors on Thursday retained the rest of the 14 players while there was no replacement named for Sehwag. India lead the four-match series 2-0. The third Test starts from March 14 in Mohali. Fourth and final Test is in Delhi from March 22.
கருத்தை எழுதுங்கள்