Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தென்னாப்பிரிக்காவில் பாக். கிரிக்கெட் அணியின் மிஸ்பா- ஹபீஸ் இடையே மோதல்

Posted by:
Published: Sunday, March 10, 2013, 12:32 [IST]
 

தென்னாப்பிரிக்காவில் பாக். கிரிக்கெட் அணியின் மிஸ்பா- ஹபீஸ் இடையே மோதல்
 

ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிஸ்பா உல் ஹக் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் முகமது ஹபீஸ் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்து மோதலாக வெடித்திருக்கிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி புளோம்பாண்டீன் நகரில் இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் வீரர்களை தேர்வு செய்வது தொடர்பாக மிஸ்பா உல் ஹக் மற்றும் முகமது ஹபீஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. தொடக்க ஆட்டக்காரரான முகமது ஹபீஸ் 2-வது விக்கெட்டாக விளையாட வேண்டும்.. சோயிப் மாலிக், அப்ரிடி போன்ற மூத்த வீரர்களும் அணியில் இடம் பெற வேண்டும் என்பது மிஸ்பா உல் ஹக்கின் கருத்து.

ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களம் தாம் இறங்க வேண்டும்.....அணியில் மூன்று அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற வேண்டும் என்பது ஹபீஸின் விருப்பம்.

இது தொடர்பாக ஓய்வறையில் இருவரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் சக வீரர்களின் தலையீட்டால் இந்த தகராறு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இப்படி ஒரு தகராறே நடைபெறவில்லை என்று மறுத்திருக்கிறது.

English summary
Pakistan cricket authorities forcefully denied reports of differences between Misbah-ul Haq and Mohammad Hafeez ahead of the five-match one-day series against South Africa starting on Sunday.
கருத்தை எழுதுங்கள்