Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஷேன் வாட்சன் உள்பட 4 ஆஸி. அணி வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை- அணியிலிருந்து நீக்கம்!

Posted by:
Published: Monday, March 11, 2013, 14:36 [IST]
 

ஷேன் வாட்சன் உள்பட 4 ஆஸி. அணி வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை- அணியிலிருந்து நீக்கம்!
 

மொகாலி: இந்தியாவுடனான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 4 வீரர்களை ஆஸ்திரேலியா அணி அதிரடியாக நீக்கியிருக்கிறது.

கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியும் பெற்று தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

3-வது டெஸ்ட் போட்டி வரும் 14-ந்தேதி மொகாலில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் 4 பேர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கின்றனர். ஷேன் வாட்சன், ‌ஜேம்ஸ் பட்டிசன், உஸ்மான் குவாஜா, ஜான்சன் ஆகியோர் நீக்கப்பட்டோர் ஆவர். அணியின் சக வீரர்களுக்கு இவர்கள் 4 பேரும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தால் நீக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக் குழு அறிவித்திருக்கிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

English summary
Reeling under two successive defeats, Australia Test selection was thrown into disarray as four of their players were dumped out of the squad for third Test due on disciplinary reasons, on Monday.
கருத்தை எழுதுங்கள்