Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மொஹாலி டெஸ்ட் போட்டி- மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

Posted by:
Published: Thursday, March 14, 2013, 14:53 [IST]
 

மொஹாலி டெஸ்ட் போட்டி- மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
 

மொஹாலி: மொஹாலியில் இன்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசாத நிலையில் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று மொஹாலி மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் காலையிலேயே மழை வந்து விட்டது. இதனால் டாஸ் கூட போடப்படாத நிலை ஏற்பட்டது.

மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுதாக நடுவர்கள் அறிவித்தனர்.

நள்ளிரவுக்கு மேல் அதிகாலை 3 மணியிலிருந்து தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த நடுவர்கள் ஆட முடியாத நிலையில் மைதானம் இருப்பதால் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். பிற்பகல் 1 மணியளவில் இந்த முடிவை நடுவர்கள் அறிவித்தனர்.

இன்றைய ஆட்டம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை முதல் காலை 9 மணிக்கே போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
There was no play possible on the first day of the third Test between India and Australia here at PCA Stadium on Thursday. Rain had the final say here with toss also not taking place.
கருத்தை எழுதுங்கள்