Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மொகாலி கிரிக்கெட்: இந்தியா அபாரம்! முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 283ரன்கள்!

Posted by:
Updated: Saturday, March 16, 2013, 16:51 [IST]
 

மொகாலி: மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் தொடக்க வீரர்களான ஷிகார் தவான், முரளி விஜய் அபாரமாக விளையாடினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 283 ரன்களை எடுத்திருக்கிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர்களான கோவன் 86, வார்னர் 71 ரன்களையும் எடுத்திருந்தனர். ஸ்டீவன் சுமித் 58 ரன்னும், ஸ்டார்க் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்டார்க் 80 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். ஸ்மித் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஒஜா பந்து வீச்சில் அவுட்டானார். அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் ஜோடி சேர்ந்து ஆடினார். சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் 99 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.. இறுதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களைக் குவித்தது.

இதைத் தொடர்ந்து இந்டிய அணி இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும் ஷிகார் தவானும் களமிறங்கினர். வீரேந்திர சேவாக்குக்கு பதிலாக ஷிகார் தவான் சேர்க்கப்பட்டிருந்தார்.

உலக சாதனை படைத்த ஷிகார் தவான்

மொகாலி கிரிக்கெட்: இந்தியா அபாரம்! முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 283ரன்கள்!
ஷிகார் தவானுக்கு இதுதான் அறிமுகப் போட்டி. இருவரும் நிலைத்து ஆடி ரன்களைக் குவித்தனர். ஷிகார் தவானின் ஆட்டம் அற்புதமானதாக இருந்தது. 85 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். இது உலக சாதனையும் கூட. தென்னாப்பிரிக்காவின் பிரையர்தான் 86 பந்துகளில் 100 ரன்களை எடுத்தவர் என்பதுவே இதுவரையிலான உலக சாதனை. தமது அறிமுகப் போட்டியிலே உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார் ஷிகார் தவான்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 283 ரன்களைக் குவித்திருக்கிறது. ஷிகார் தவான் 185 ரன்களுடனும் முரளி விஜய் 83 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

Story first published:  Saturday, March 16, 2013, 12:17 [IST]
English summary
Australia were bowled out for 408 in their first innings of the third Test at Mohali on Saturday.
கருத்தை எழுதுங்கள்