Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மொகாலி கிரிக்கெட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 499 ரன்கள் குவிப்பு!

Posted by:
Updated: Sunday, March 17, 2013, 16:01 [IST]
 

மொகாலி கிரிக்கெட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 499 ரன்கள் குவிப்பு!
 

மொகாலி: மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 499 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்த நாள் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களைக் குவித்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது.

தவான் உலக சாதனை

சேவாக்குக்குப் பதில் தொடக்க வீரராக சேர்க்கப்பட்ட ஷிகார் தவான் அதிரடியாக விளையாடினார். அவருடன் முரளி விஜய்யும் நிலைத்து ஆடினார். ஷிகார் தவான் 85 பந்துகளில் 100 ரன்களைக் கடந்து உலகின் அதிவேக சதமடித்த சாதனையை படைத்தார். நேற்று ஆட்ட நேர முடிவில் ஷிகார் தவான் 185 ரன்களுடனும் முரளி விஜய் 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

13 ரன்களில் இரட்டை சதம் கோட்டை

இன்று இருவரும் தங்களது ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இரட்டை சதத்தை அடித்து மற்றொரு உலக சாதனையை நிகழ்த்துவார் என எதிபார்க்கப்பட்ட ஷிகார் தவான், 187 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் முரளி விஜய்யுடன் ஆடிய புஜாரா 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின்னர் முரளி விஜய்யுடன் டெண்டுல்கர் இணைந்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. டெண்டுல்கர் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 384 ரன்களை எடுத்திருந்தது.

சொற்ப ரன்களில் இந்திய வீரர்கள்

முரளி விஜய் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஆடி வந்தார். இந்திய அணி 412 ரன்களை எடுத்த நிலையில் முரளி விஜய் 153 ரன்களுடன் அவுட் ஆனார். அதன் பின்னர் கோஹ்லியைத் தவிர பின்வரிசை வீரர்கள் எவரும் நிலைக்கவில்லை. கேப்டன் டோணி 4 , ஜடேஜா 8, அஸ்வின் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இஷாந் ஷர்மா டக் அவுட் ஆனார். கோஹ்லி 67 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்திய அணி 499 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்தார் புவனேஸ்குமார். தொடக்க வீரரான வார்னரை முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார்.

Story first published:  Sunday, March 17, 2013, 10:16 [IST]
English summary
Murali Vijay reaches his third Test hundred in style lofting Nathan Lyon over long-midwicket for four. It has been an innings that was largely overshadowed by Dhawan 187 but nevertheless, it has been equally important as the opener has shown restraint and avoided playing any rash strokes.
கருத்தை எழுதுங்கள்