Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட் : மொகாலி போட்டியில் வெற்றி- டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!

Posted by:
Updated: Monday, March 18, 2013, 17:03 [IST]
 

கிரிக்கெட் : மொகாலி போட்டியில் வெற்றி- டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
 

மொகாலி: மொகாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களைக் குவித்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க வீரர்களான ஷிகார் தவான் மற்றும் முரளி விஜய் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். ஷிகார் தவான் அறிமுகப் போட்டியிலேயே 187 ரன்களைக் குவித்தார். முரளி விஜய் 142 ரன்களைக் குவித்தார். மற்ற இந்திய வீரர்கள் சோபிக்கவில்லை. இந்திய அணி முதல் .இன்னிங்ஸில் 499 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

இன்றும் இந்திய அணியின் பந்துவீச்ச்சை ஆஸ்திரேலியாவால் எதிர்கொள்ள முடியவில்லை. 143 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. அனைத்து விக்கெட்டுகளையும் 223 ரன்களுக்குள் எடுத்து சுருண்டது ஆஸ்திரேலியா.

இதனால் இந்தியா வெல்ல 133 ரன்களே தேவை என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்ஸ் தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும் புஜாராவும் களமிறங்கினர். இந்திய அணி 42 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய் அவுட் ஆனார். அவர் 26 ரன்கள்தான் எடுத்திருந்தார். பின்னர் புஜாரா 28 ரன்களிலும் கோஹ்லி 34 ரன்களிலும் டெண்டுல்கர் 21 ரன்களிலும் அவுட் ஆயினர். டோணியும் ஜடேஜாவும் அவுட் ஆகாமல் வெற்றி இலக்கை எட்டினர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

4 டெஸ்ட் போட்டிகளில் 3-ல் வென்று டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியிருக்கிறது.டெல்லியில் 22-ந் தேதி இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது

Story first published:  Monday, March 18, 2013, 12:10 [IST]
English summary
Australia are 143 for the loss of eight wickets with B Haddin batting on 12 and M Starc batting on 2. Moises Henriquesc (2) and P Siddle (13) were the last two batmen to be dismissed.
கருத்தை எழுதுங்கள்