வெல்லிங்டன்: கெவின் பீட்டர்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 6வது ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் பீட்டர்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு விட்டது. இதனால் அவருக்கு வலது முழங்காலில் நல்ல வலி காணப்படுகிறது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. அதில் எலும்பில் தேய்வு காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கார்ட்டிலேஜ் சேதத்திற்கும் வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர் இங்கிலாந்து திரும்புகிறார்.
மேலும், அவர் அடுத்து 6 முதல் எட்டு வாரங்களுக்கு விளையாட முடியாது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஐபிஎல் தொடரிலும் அவர் இந்த ஆண்டு விளையாட மாட்டார்.
6வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 3ம் தேதி தொடங்குவது நினைவிருக்கலாம்.










