Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெல்லி டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் இந்தியா 266/8!

Posted by:
Updated: Saturday, March 23, 2013, 17:44 [IST]
 

டெல்லி டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் இந்தியா 266/8!
 

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை விட 4 ரன்கள் முன்னிலைய் வகிக்கிறது இந்தியா.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கமே ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. 1.4 ஓவரில் அந்த அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வார்னர் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ஹியூக்ஸ், கோவன்னுடன் இணைந்து கொண்டார். கோவன்னும் ஹியூக்ஸூம் நிதானமாக ஆடினர். ஆனால் இந்த நிதானம் 20 ஓவர்கள் வரைதான் தாக்குப் பிடித்தது. ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் எடுத்த நிலையில் ஹியூக்ஸ் அவுட் ஆனார். அவர் 45 ரன்களை எடுத்திருந்தார். இதன் பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் நிலைக்கவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது. சிடில் 47 ரன்களுடனும் பேட்டின்சன் 11 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். ஆனால் கூடுதலாக 31 ரன்கள் எடுத்த நிலையில் அதாவது ஆஸ்திரேலியா அணி 262 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்தியாவின் பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஓஜா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியில் பேட்டிசனை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஓஜா தமது 100-வது விக்கெட்டை எடுத்தார்.

பின்னர் இந்திய அணி இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், புஜாரா களம் இறங்கினர். இருவரும் நிலைத்து இந்திய அணியின் ஸ்கோரை 108 ஆக உயர்த்திய நிலையில் புஜாரா அவுட் ஆனார். அவர் 52 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் முரளியுடன் கோஹ்லி இணைந்தார். ஆனால் கோஹ்லி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 1 ரன் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். தொடர்ந்தும் களத்தில் இருந்த முரளியுடன் டெண்டுல்கர் கை கோர்த்தார். முரளி 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஆடிய ரஹானே 7 ரன்கள்தான் எடுத்தார். இந்திய 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. டோணியும் டெண்டுல்கரும் இணைந்து விளையாடிய நிலையில் 32 ரன்களில் டெண்டுல்கர் அவுட் ஆனார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது.

டெண்டுல்கருக்குப் பின்னர் கேப்டன் டோணி 24 ரகளிலும் ஜடேஜா 43 ரன்களிலும் அஸ்வின் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்துள்ளது. புவனேஷ்குமார் 10 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருக்கிறார். ஓஜா, ஷர்மா ஆகியோரது விக்கெட்டுகளும் கைவசம் இருக்கிறது.

Story first published:  Saturday, March 23, 2013, 10:46 [IST]
English summary
India bowled out Australia for 262 in the first session of Day Two of the fourth Test match at Delhi.
கருத்தை எழுதுங்கள்