Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெல்லி டெஸ்ட் - நடுவர்களுக்கு இந்திய அணி கேப்டன் டோணி பாராட்டு

Posted by:
Updated: Tuesday, March 26, 2013, 18:34 [IST]
 

டெல்லி டெஸ்ட் - நடுவர்களுக்கு இந்திய அணி கேப்டன் டோணி பாராட்டு
 

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் வார்னரின் கோபத்தை பெரிதாக்காமல் பிரச்சனையை சமாளித்த நடுவர்களை இந்திய அணியின் கேப்டன் டோணி பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லி கோட்லா மைதானதில் நடந்த 4-வது மற்றும் இறுதி டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று புதிய வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்தது.

டெல்லி டெஸ்ட் போட்டியி ல் 2-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவின் வார்னர் மிகவும் கோபமாக நடந்து கொண்டார். அப்போது நடுவர்கள் பொறுமையாக செயல்பட்டு பிரச்சினையை சமாளித்ததாக இந்திய அணியின் கேப்டன் டேணி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி டெஸ்டில் நடுவர்கள் ரஞ்சன் மதுகலவே, அலிம்தர், கேட்டில் போர்க் ஆகியோரது பணி சிறப்பானதாக இருந்தது. நடுவர்கள் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியது என்றார்.

Story first published:  Tuesday, March 26, 2013, 14:16 [IST]
English summary
Indian cricket team Captain Dhoni has praised umpires's stand on Warners's actions in Delhi Test match.
கருத்தை எழுதுங்கள்