Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கேப்டன்ஸியால் என்னோட ஆட்டம் பாதிக்காது: சேவாக் நம்பிக்கை!

Posted by:
Published: Saturday, March 30, 2013, 16:28 [IST]
 

கேப்டன்ஸியால் என்னோட ஆட்டம் பாதிக்காது: சேவாக் நம்பிக்கை!
 

டெல்லி: கிரிக்கெட் விளையாடும் போது அணியின் கேப்டனாக இருப்பதால் என்னோட ஆட்டம் எந்த வகையிலும் பாதிக்காது என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு விளையாடுகிறார் வீரேந்திர சேவாக். அவர் அணி கேப்டன் பொறுப்பு வகிப்பது பற்றி கூறுகையில், அணியின் கேப்டனாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... தனது ஆட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது. கேப்டனாக இருக்கிறோம், அல்லது இல்லாமல் இருக்கிறோம் என்பது ஒரு பிரச்னையே இல்லை.

கேப்டன்ஸி என்பது ஆட்டத்தில் ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது. கேப்டனாக நான் எப்போதும் நெருக்கடியை உணர்ந்ததில்லை. என் பேட்டிங்கில் அதை நான் திணித்ததுமில்லை என்றார் அவர்.

English summary
He has relinquished the Delhi Daredevils captaincy after last season but Virender Sehwag feels that his decision will have no bearing on his approach as he again shoulders the burden of being the batting mainstay of the franchise in the sixth edition of IPL.
கருத்தை எழுதுங்கள்