Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல்6வது தொடரின் முதல் போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்!!

Posted by:
Updated: Wednesday, April 3, 2013, 19:31 [IST]
 

ஐபிஎல்6வது தொடரின் முதல் போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்!!
 

கொல்கத்தா: ஐபிஎல் 6-வது தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் இன்று கொல்கத்தாவில் மோதுகின்றன.

ஐபிஎல்6வது தொடரில் இன்று முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடஸ் அணி தமது சொந்த மண்ணில் மகிளா ஜெயவர்த்தனே தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதுகிறது.

டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே பீட்டர்சன், ஜெஸ்ஸி ரைடர் ஆகியோர் தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். இந்நிலையில் அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் வீரேந்திர சேவாக், முதுகுவலியால் அவதிப்படுகிறார். அதனால் இன்றைய போட்டியில் அவர் ஆடுவாரா என்பதும் கேள்விக்குறி. தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் மோர்கெல் இன்னமும் அணியில் இணையவில்லை.முக்கிய வீரர்கள் இல்லாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களம் இறங்குவது பெரும் நெருக்கடியாகத்தான் இருக்கும். ஆனால் டெல்லி அணியில் இளம் வீரர் உன்முக்த் சந்த் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இதேபோல் வார்னர், இர்பான், வேணுகோபால் ராவ் ஆகியோரது ஆட்டமும் அகர்கர், நெஹ்ரா, இர்பான், உமேஷ் பந்து வீச்சும் கொல்கத்தாவுக்கு சவாலாக இருக்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான மெக்கல்லம் காயம் காரணமாக அவதிப்படுகிறார். மற்றொரு வெளிநாட்டு வீரர் பேட்டின்சன் இன்னமும் அணியில் இணைந்து கொள்ளவில்லை. கேப்டன் கவுதம் காம்பீர் தற்போதுதான் மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்து மீண்டிருக்கிறார். இருப்பினும் ஜாக் காலிஸ், யூசுப் பதான், மனோஜ் திவாரி ஆகியோரின் பேட்டிங் கை கொடுக்கலாம். பாலாஜி, சுக்லா, காலிஸ் மற்றும் சுனில் நரைன் பந்து வீச்சும் டெல்லி டேர்டெவில்ஸை பதம் பார்க்கலாம்.

இந்த இரு அணிகளும் இதுவரை 9 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வென்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

Story first published:  Wednesday, April 3, 2013, 14:10 [IST]
English summary
What better place for the sixth edition of the Indian Premier League to begin than the home of Indian cricket, Eden Gardens. And what better contest to kick-start the extravaganza than defending champions Kolkata Knight Riders against Delhi Daredevils.
கருத்தை எழுதுங்கள்