Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கெய்ல் புயல்... வினய் சூறாவளி... ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு திரில் வெற்றி

Posted by:
Updated: Friday, April 5, 2013, 9:54 [IST]
 

கெய்ல் புயல்... வினய் சூறாவளி... ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு திரில் வெற்றி
 

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு திரில்லான வெற்றியைத் தேடித் தந்தனர் புயல் வேக வீரர் கிறிஸ் கெய்லும், வினய்குமாரும்.

கெய்ல் பேட்டிங்கில் கலக்க, வினய்குமார் பந்து வீச்சில் பிரமாதப்படுத்தினார். கிறிஸ் கெய்ல் அடித்து நொறுக்கி 92 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் செம தெனாவட்டாக இருந்தார். அதேபோல பந்து வீச்சில் வினய் குமார் வெறும் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த அருமையான வெற்றியைப் பெற்றது பெங்களூர் அணி. முன்னதாக முதலில் ஆடி 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் பதிலடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரை பயமுறுத்தியது.

5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை வரை வந்து விட்ட அவர்களை வினய் குமார் படு நேர்த்தியான பந்து வீச்சால் நிலை குலைய வைத்து வெற்றி ரன்களைத் தொட்டு விடாமல் தடுத்து பெங்களூரைக் காப்பற்றி ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார்.

6வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், திரில்லிங்காகவும் இருந்ததால் ரசிகர்கள் பெரும் குஷியடைந்தனர்.

Story first published:  Friday, April 5, 2013, 8:46 [IST]
English summary
Chris Gayle smashed an unbeaten 92 before R Vinay Kumar's three-wicket burst helped Royal Challengers Bangalore eke out a close two-run win over Mumbai Indians in a thrilling Indian Premier League match. Asked to bat, Gayle first single-handedly powered RCB to a fighting 156 for five before Vinay Kumar (3/27) picked up two crucial wickets in a tense final over to restrict Mumbai to 154 for five.
கருத்தை எழுதுங்கள்