Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: ஹைதராபாத்தில் சன் ரைசர்ஸ் - புனே வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்!

Posted by:
Updated: Friday, April 5, 2013, 19:33 [IST]
 

ஐபிஎல் 6: ஹைதராபாத்தில் சன் ரைசர்ஸ் -  புனே வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்!
 

ஹைதரபாத்: நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் ஹைதராபாதில் இன்று லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.

சன் ரைசர்ஸ் அணி

குமார் சங்ககாரா தலைமையில் களமிறங்கும் புதுவரவான சன்ரைஸர்ஸ் அணிக்கு ஜே.பி.டுமினி, திசாரா பெரேரா, கேமரூன் ஒயிட், பார்திவ் படேல் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். அதிரடி பேட்ஸ்மேன் தவான் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடமாட்டார். பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் அந்த அணிக்கு மிகப் பெரிய பலமாகத் திகழ்கிறார். இஷாந்த் சர்மா மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சுழற்பந்துவீச்சில் அமித் மிஸ்ரா, நாதன் மெக்கல்லம் ஆகியோரை நம்பியுள்ளது.

புனே வாரியர்ஸ் அணி

ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சாதிக்காத அணிகளில் புனே வாரியர்ஸ் அணியும் ஒன்று. கடந்த 2010-ம் ஆண்டுதான் ஐபிஎல் தொடருக்குள் கால் வைத்தது. கடந்த 2 சீசனிலும் அதிக தோல்விகளை சந்தித்திருக்கிறது. தற்போதைய ஐபிஎல் 6வது தொடருக்கு கிளார்க் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இதனால் மேத்யூஸ் தலைமையில் புனே வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள யுவராஜ்சிங், ஆரோன் பிஞ்ச், அபிஷேக் நாயர், ராஸ்டெய்லர், உத்தப்பா, லூக் ரைட், சாமுவேல்ஸ் ஆகியோர் நன்றாக விளையாடினால் திரும்பிப் பார்க்க வைக்க முடியும்.பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அசோக் திண்டா, புவனேஸ்வர் குமார், அஜந்தா மெண்டிஸ், ராகுல் சர்மா ஆகியோர் முக்கிய வீரர்கள் ஆவர். புனே அணி மொத்தம் 29 போட்டிகளில் விளையாடி 8ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Friday, April 5, 2013, 10:49 [IST]
English summary
It is time to walk the talk and deliver on promises. Sunrisers Hyderabad may be the newest team on the IPL horizon, but they comprise players who have been there and done that before and the sixth edition offers them new hope as they begin their campaign against Pune Warriors.
கருத்தை எழுதுங்கள்