Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி!

Posted by:
Updated: Saturday, April 6, 2013, 23:54 [IST]
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி!
 

சென்னை: ஐபிஎல் 6-வது தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் முதலாவது போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் குவிந்திருந்தனர்..மேலும் கடந்த ஐபிஎல் போட்டிகளில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை மைதானம் பெருமளவு கை கொடுத்தே வந்திருக்கிறது என்பதும் ஒரு காரணம்.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவு

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக டெண்டுல்கரும் ரிக்கி பாண்டிங்கும் களம் இறங்கினர். முதல் ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நன்னேஸ் வீசினார். முதல் ஓவரில் 4 பந்துகளில் பாண்டிங் 3 ரன்கள் எடுத்த நிலையில் 5-வது பந்தை சச்சின் எதிர்கொண்டார். ஆனால் டெண்டுல்கர் எல்.பி.டபிள்யூவில் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் தொடக்கத்திலேயே சூடுபிடிக்கத் தொடங்கியது.ரிக்கி பாண்டிங்குடன் தினேஷ் கார்த்திக் இணைந்து கொண்டார். அவர் 9 பந்துகளில்10 ரன்களை விறுவிறுவென குவித்தார். ரிக்கி பாண்டிங் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் அங்கித் வீசிய பந்தில் ரிக்கி பாண்டிங் அடித்த பந்தை அஸ்வின் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். இதனால் அந்த அணி 18ரன்களில்2-வது விக்கெட்டை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. தினேஷ் கார்த்திக்குடன் ரோஹித் சர்மா இணைந்தர். ரோஹித் சர்மா வந்த வேகத்தில் ரன்களை அதிரடியாக எடுத்துக் கொண்டிருந்தார். 6.1வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 41 ரன்களை எடுத்திருந்தது. அப்போது 8 ரன்களுடன் இருந்த ரோஹித் சர்மா பிரோவோவின் பந்தை எதிர்கொண்டார். அவர் அடித்த பந்தை டோணி கேட்ச் பிடித்து அவுட் ஆக்கிவிட ஆடுகளத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குவித்தனர். 7ஓவருக்குள் 3 விக்கெட்டை 41ரன்களிலேயே பறிகொடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்குடன் அம்பாத்தி ராயுடு இணைந்தார். 8வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒருவழியாக 50 ரன்களைக் கடந்தது. 9வது ஓவரில் 25 பந்துகளில்37 ரன்களை எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் பிரோவா பந்தில் எல்.பி.டபிள்யூ.முறையில் அவுட் ஆகி வெளியேறினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் சற்று நிலைத்து ரன்களைக் குவித்தவர் தினேஷ்கார்த்திக். இதைத் தொடர்ந்து ராயுடுவுடன் பொல்லார்டு இணைந்தார். பொல்லார்டு தொடக்கத்திலேயே பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். அவர் 6 பந்துகளில்11 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடக்கம். அப்போது 10 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை எடுத்திருந்த ராயுடு நன்னேஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.11வது ஓவரில் 5 வது விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. பொல்லார்டுவுடன் ஸ்மித் இணைந்தார். அவர் 3 ரன்கள்தான் எடுத்தார். பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மும்பை இந்தியன்ஸ் அணி 83 ரன்களில் 6வது விக்கெட்டையும் பறிகொடுத்தது.

நிலைத்து ஆடிய பொல்லார்டு

களத்தில் இருந்த பொல்லார்டுவுடன் ஹர்பஜன்சிங் இணைந்தார். பொல்லார்டு சற்று நிலைத்து ஆடி ஒருவழியாக அந்த அணியை 100 ரன்களை கடக்க வைத்தார். பொல்லார்டுவின் அதிரடி தொடர்ந்தது. 18 ஆவது ஓவர் முடிவில் அவர் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 33 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்தார். 18.5வது ஓவரில் 35 பந்துகளில் அரைசதத்தைத் தொட்டார் பொல்லார்டு. இறுதி ஓவரில் 4வது பந்தில் ஹர்பஜன்சிங் ஒரு சிக்சர் அடித்தார். இறுதி பந்தில் பொல்லார்டு. மற்றொரு சிக்சர் அடித்து விளாசினார். அவர் 57 ரன்களுடனும் ஹர்பஜன்சிங் 20 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாற்றம்

பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய்யும் மைக் ஹசியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2வது ஓவர் முடிவில் 7 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய் முன்பாஃப் பட்டேல் பந்தை அடிக்க முயற்சித்து ஸ்டம்ப் மீது மோதி அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்களை எடுத்தது. ஹசியுடன் சுரேஷ் ரைனா இணைந்தார். ஹசியும் ரைனாவும் அதிரடியாக ரன்களைக் குவித்து வந்தனர்.5வது ஓவரில் 7 பந்துகளில்10 ரன்கள் எடுத்திருந்த ரைனா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 30 ரன்களை எடுத்திருந்தது. மைக் ஹசியும் 20 ரன்கள் எடுத்த நிலையில் 8வது ஓவரில் அவுட் ஆக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் பிராவோவுடன் பத்ரிநாத் கை கோர்த்து சென்னை அணியை 50 ரன்களைக் கடக்க வைத்தனர். ஆனால் சென்னை அணி 58 ரன்கள் எடுத்த நிலையில் 10 ரன்களுடன் ஆடிய பிராவோ அவுட் ஆனார்.

தொடர்ந்து சரிவு

பினன்ர் பத்ரியுடன் கேப்டன் டோணி கைகொடுக்க பத்ரியோ 16 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியனுக்குத் திரும்பினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 66 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறீகொடுத்தது. இதனால் அந்த அணியின் வெற்றியானது பின்வரிசை வீரர்களின் கைகளுக்கு மாறியது. தொடக்கம் மற்றும் முன்வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் சுருண்டு பெவிலியனுக்குத் திரும்பியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கேப்டன் டோணி அதிரடியாக ஆடி சென்னை அணியை வெற்றி பெற வைக்கமாட்டாரா என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்தது. மும்பைஅணியில் ஓஜா 2 விக்கெட்டுகளைப் பறித்தா. ஜோன்சென், படேல், ஹர்பஜன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.14வது ஓவர் முடிவில் 33 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தள்ளப்பட்டது. 16வது ஓவரில் ஒருவழியாக டோணியும் ஜடேஜாவும் இணைந்து அணியின் ஸ்கோரை 97ஆக உயர்த்திய நிலையில் ஜடேஜா பட்டேல் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அவர் 11 பந்துகளில்16 ரன்கள் எடுத்திருந்தார்.

கேப்டன் டோணியுடன் அஸ்வின் இணைந்தார். அஸ்வினும் டோணி ஜோடியுமாவது சாதித்துவிடுமா என்று ரசிகர்கள் ஏங்கியிருந்தனர். 26 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க வேண்டிய மிகவும் நெருக்கடியான நிலையில் சென்னை அணி தவித்தது. ஆனால் ஓவர்கள் நகர்ந்தனவே தவிர சென்னை அணியின் ஸ்கோர் வெற்றியை நோக்கி பயணிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை அணியை பலமுறை கேப்டன் டோணி கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்திருப்பதால் ஆறுதலோடு ரசிகர்கள் காத்திருந்தனர். 16.5வது ஓவரில் 2 ரன்களே எடுத்த அஸ்வின் அவுட் ஆக அதிர்ச்சியில் உறைந்து போயினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள். 17வது ஓவர் முடிவில் 109 ரன்களையே அந்த அணி எடுத்தது. பட்டேல், ஓஜா, ஹர்பஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பரபரப்பான கடைசி 3 ஓவர்கள்

18வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து சற்று ஆறுதல் படுத்தினார் கேப்டன் டோணி. இதனால் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு சற்றே மாறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கேப்டன் டோணியுடன் லெளஹ்லி கை கோர்த்திருந்தார். டோணி 18 பந்துகளில் 40 ரன்களைக் கடந்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடக்கம். 17.5வது ஓவரில் லெளஹ்லிரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். சென்னை அணி மிக நெருக்கடியில் தவித்தது. 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கேப்டன் டோணிதான் தீர்மானிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவானது.12 பந்துகளில் 23 ரன்களை எடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் 19வது ஓவரை எதிர்கொண்டது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி. டோணியுடன் அங்கித் இணைந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முந்தைய ஐபிஎல் தொடர்களிலும் கடைசி ஓவர் வரை இப்படி பதற வைத்து வெற்றி பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தனர். அப்போது டோணி ஒரு சிக்சர் அடித்து அரை சதத்தைக் கடந்தது ரசிகர்களை துள்ள வைத்தது.

கடைசி ஓவரில் அவுட் ஆன டோணி

19வது ஓவரின் முடிவில் 137 ரன்களை எடுத்தது சென்னை அணி. 6 பந்துகளில்12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி ந்டீக்கவில்லை. டோணி 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் இறுதி ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். நன்னெஸூம் அங்கித்தும் களத்தில் விளையாடினர். அங்கித் 2 ரன்களை எடுத்து 139 ஆக்கினார். ஆனால் வெற்றிக்குரிய ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 139 ரன்களையே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது.

Story first published:  Saturday, April 6, 2013, 12:21 [IST]
English summary
Recovering from the narrow defeat in their opening tie against Bangalore, Mumbai Indians will have their task cut out when they lock horns with Chennai Super Kings in Chennai on Saturday
கருத்தை எழுதுங்கள்