Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Posted by:
Updated: Saturday, April 6, 2013, 21:04 [IST]
 

ஐபிஎல் 6: டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
 

ஐபிஎல் 6: டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

டெல்லி: ஐ.பி.எல். 6வது தொடரில் டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது..கடைசி பந்து வரை போட்டி நீடித்ததால் மிகுந்த பரபரப்பாக இருந்தது இன்றைய போட்டி.

ராஜஸ்தான் ராயல்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது டெல்லி டேர்டெவில்ஸ். இதனால் சொந்த மண்ணில் அந்த அணி இன்றைய ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே பந்துகளை வீணாக்காமல் ரன்களைக் குவிப்பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்முரம் காட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பெரேரா 12 பந்துகளில் 14 ரன்களையும் ரஹானே 24 பந்துகளில்28 ரன்களையும் எடுத்தனர். அடுத்து வந்த ராகுல் டிராவிட் 51 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். பின்னி 20 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார்.. பின்வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20-வது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது.டெல்லி டேர்டெவில்ஸின் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெல்லி டேர்டெவில்ஸ்

பின்னர் ஆட வந்த டெல்லி டேர்டெவில்ஸ் பாராட்டும்படி விளையாடியது. இருப்பினும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த உன்முக்த் சந்த் 19 பந்துகளில் 23 ரன்களைக் குவித்த நிலையில் அவுட் ஆனார். இதில் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரிகளும் அடங்கும். தொடக்க வீரரான வார்னருடன் ஜெயவர்த்தனே இணைந்தார். அவர் 16 பந்துகளில்19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இருப்பினும் வார்னர் நிலையாக நின்று அரைசதம் கடந்தார். அவருக்கு மன்பிரீத் ஜுனேஜா உறுதுணையாக விளையாடினார். இறுதி ஓவர்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 2 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி149 ரன்கள் எடுத்த போது மன்பிரீத் ஜூனேஜா அவுட் ஆனார். அவர் 18 பந்துகளில் 20 ரன்களை எடுத்திருந்தார். அடுத்த சில பந்துகளிலேயே வார்னரும் அவுட் ஆனார்ல் அவர் 56 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

பரபரப்பான இறுதி ஓவர்கள்

19வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு157 ரன்களை எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. கடைசி 6 பந்துகளில் 9 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் கடைசி ஓவரை டெல்லி டேர்டெவில்ஸ் எதிர்கொண்டது. ரஸ்ஸலும் போத்தாவும் களத்தில் இருந்தனர். ஆனால் கடைசி ஓவரில் கூடுதலாக 2 ரன்கள் எடுத்த நிலையில் போத்தா அவுட் ஆனார். 2 பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ரஸல் அவுட் ஆனார்.

கடைசி பந்தை எதிர்கொள்ள நமன் ஓஜா இறக்கப்பட்டார். ஆனால் அவரால் கடைசி பந்திலும் ரன் எடுக்க முடியாமல் போனது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணிலேயே டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.ராஜஸ்தான் அணியின் கூப்பர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் அந்த அணியே தொடர்ந்தும் வெற்றி பெற்று வந்தது. ஆனால் இம்முறை சொந்த மண்ணில் டெல்லி அணியே தோல்வியைத் தழுவ நேரிட்டிருக்கிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சேவாக், பீட்டர்சன் மற்றும் ஜெஸி ரைடர் உள்ளிட்ட பலர் பங்கேற்காததால் தொடர் தோல்விகளைத் தழுவி வருகிறது.

Story first published:  Saturday, April 6, 2013, 12:31 [IST]
English summary
Virender Sehwag will sit out of a second game as Delhi Daredevils attempt to register their first points in the sixth edition of the Pepsi Indian Premier League when they face Rajasthan Royals, playing their first match, at Feroz Shah Kotla on Saturday.
கருத்தை எழுதுங்கள்