Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: புனே வாரியர்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ்!

Posted by:
Published: Saturday, April 6, 2013, 10:07 [IST]
 

ஹைதராபாத்; நடப்பு ஐபிஎல் 6-வது தொடரின் லீக் போட்டியில் உள்ளூர் அணியான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு விளையாடிய ஹைதராபாத் டெக்கான் கிரானிக்கல்ஸ் அணி, ஐ.பி.எல். நிர்வாகத்தால் நீக்கப்பட்டதையடுத்து, அந்த அணிக்கான உரிமத்தை சன் குழுமம் பெற்றது. அந்த நிர்வாகத்தின் கீழ் சன் ரைசர்ஸ் என்ற பெயரில் நேற்று முதல் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற புனே அணி பந்துவீச முடிவு செய்தது.

சமாளித்து ஆடிய சன் ரைசர்ஸ்

சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அக்சத் ரெட்டி, பார்த்தீவ் படேல் ஆகியோர் களமிறங்கினர். 19 ரன்கள் எடுத்த பார்த்தீவ் படேல், திண்டாவின் பந்தில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சங்ககாராவும் சரியாக விளையாடான்மல் 15 ரன்களில் அவுட் ஆனார். அக்சய் ரெட்டி 27 ரன்கள் எடுத்தபோது, அவரை யுவராஜ் சிங் வெளியேற்றினார். ஒயிட்டும் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 15 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அதிரடியாக ஆடிய பெரேரா முதல் சிக்சரை பதிவு செய்தார். ஆனால் அவர் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய விகாரி 11 ரன்களில் அவுட் ஆனார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் 6:  புனே வாரியர்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ்!
திணறிய புனே வாரியர்ஸ்

127 வெற்றி இலக்கோடு விளையாடத் தொடங்கிய புனே வாரியர்ஸ் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் யுத்தப்பா 24 ரன்னிலும் மணீஷ் பாண்டே 15 ரன்களிலும் வெளியேறினார்கள். சாம்வேல்ஸ் 5 ரன்னிலும் யுவராஜ் சிங்கும் 2 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய டெய்லர் மற்றும் நயார் இருவரும் நிதானமாக விளையாடினர். சன் ரைசர்ஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் புனே அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் அணி தரப்பில் ஸ்டெயின் மற்றும் மிஸ்ரா சிறப்பாக பந்து வீசி தலா 3 வீக்கெட்டுகளை வீழ்த்தினர். பெரேரா 2 விக்கெட்டுகள், ஆஷிஸ் ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்தனர். நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் மிஸ்ராக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

English summary
A deadly combination of express pace from Dale Steyn and quality leg-spin from Amit Mishra, who took three wickets apiece, scripted a winning start for new franchise Sunrisers Hyderabad. Sunrisers scored a remarkable, 22-run win over Pune Warriors India in the Pepsi-IPL league match at the Rajiv Gandhi Stadium here on Friday.
கருத்தை எழுதுங்கள்