Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சில் வேகமாக விக்கெட்களைப் பறி கொடுத்த புனே வாரியர்ஸ்

Posted by:
Published: Sunday, April 7, 2013, 16:48 [IST]
 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சில் வேகமாக விக்கெட்களைப் பறி கொடுத்த புனே வாரியர்ஸ்
 

புனே: கிங்ஸ்ல் லெவன் பஞ்சாப் அணிக்கும், புனே வாரியர்ஸ் அணிக்கும் இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணி வேகமாக விக்கெட்களைப் பறி கொடுத்தது.

புனேவில் இன்று மாலை 4 மணிக்கு இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி தொடங்கியது. புனே வாரியர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.

ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகமான பந்து வீச்சால் அடுத்தடுத்து 2 விக்கெட்களை சடசடவென இழந்தது புனே வாரியர்ஸ். மனீ்ஷ் பாண்டேவும், சுமனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போது ராபின் உத்தப்பாவும், மர்லான் சாமுவேல்ஸ் ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர்.

ஏற்கனவே நடந்த தனது முதல் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது புனே வாரியர்ஸ் என்பது நினைவிருக்கலாம்.

கடந்த ஐந்து ஐபிஎல் தொடர்களிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் போட்டிகளில் வெற்றி பெற்றதே இல்லை என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

English summary
After a disappointing 22-run loss in a low scoring game against Sunrisers Hyderabad in their campaign opener, Pune Warriors would be hoping for a better batting performance when they take on Kings XI Punjab in their second IPL 2013 match in Pune on Sunday (April 7).
கருத்தை எழுதுங்கள்