Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஷேவாக், ஹர்பஜன், ஜாகிர் மீண்டும் சிறப்பாக விளையாட முடியும் - கங்குலி

Posted by:
Published: Sunday, April 7, 2013, 12:50 [IST]
 

ஷேவாக், ஹர்பஜன், ஜாகிர் மீண்டும் சிறப்பாக விளையாட முடியும் - கங்குலி
 

கொல்கத்தா: வீரேந்திர ஷேவாக், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் மீண்டும் பார்முக்குத் திரும்ப முடியும், சிறப்பாக ஆடவும் முடியும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று பேருக்குமே தற்போது இந்திய அணியில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கங்குலி கூறுகையில், இவர்களுக்கு 30 பேர் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான உத்தேச அணியில் இடமில்லை என்பதற்காக அவசரப்பட்டு கருத்து சொல்லக்கூடாது. மூன்று பேருமே அருமையான வீரர்கள். அதை நிரூபித்தவர்கள். மீண்டும் அவர்களால் திரும்பி வர முடியும்.

அவர்களது திறமை முடிந்து போய்விட்டதாக நான் கருதவில்லை.அவர்கள் நிச்சயம் சிறந்த ஆட்டத்திற்குத் திரும்ப முடியும் என்று நம்புகிறேன். நம்பிக்கையுடன் அவர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம் என்றார் கங்குலி.

English summary
Former captain Sourav Ganguly said that the axed trio of Virender Sehwag, Harbhajan Singh and Zaheer Khan can still come back into the Indian team. Reacting to the three players' omission from the list of 30 probables for the Champions Trophy, Ganguly said, "Let's not jump the gun yet. Selection is something which has always been debatable." "I don't think they are writing them off. It has happened in the past. They have come back and played. All they need to do is keep performing and hopefully they would be back.
கருத்தை எழுதுங்கள்