Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வீராதி வீர புனே வாரியர்ஸ் எடுத்தது 99... சதம் போட்டு சாய்த்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Posted by:
Published: Monday, April 8, 2013, 7:55 [IST]
 

வீராதி வீர புனே வாரியர்ஸ் எடுத்தது 99... சதம் போட்டு சாய்த்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 

புனே: புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையிலான போட்டி ஒன் சைடு மேட்ச்சாகப் போனது. பஞ்சாபின் பந்து வீச்சைத்தாக்குப் பிடிக்க முடியாமல் 99 ரன்களில் சுருண்டது புனே. பின்னர் ஆடிய பஞ்சாப் 2 விக்கெட் மட்டும் இழந்து 100 எடுத்து வெற்றி பெற்றது.

இதுதான் இந்தத் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். அதை விட முக்கியமானது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் போட்டியிலேயே அது வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணியின் வெற்றியை மந்தீப் சிங்கும், மனான் வோராவும் உறுதி செய்தனர்.

12.2 ஓவர்களிலேயே 2விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது பஞ்சாப். அந்த அணியின்கேப்டன் கில்கிறைஸ்ட் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணி எடுத்து எடுப்பிலிருந்தே சரியத் தொடங்கியது. பஞ்சாப் வேகப் பந்து வீச்சாளர்கள் அதிரடியாக பந்து வீசி புனே வீரர்களை நிலைகுலைய வைத்தனர்.

புனேவுக்கு இது 2வது போட்டியாகும். முதல் போட்டியிலும் அது தோல்வியடைந்திருந்தது. தற்போது 2வது தோல்வியை சந்தித்துள்ளது.

English summary
Kings XI Punjab recorded their first win in the sixth edition of the Indian Premier League (IPL) with a comfortable eight-wicket win over Pune Warriors India at the Subrata Roy Sahara Stadium here Sunday (April 7). Excellent bowling juxtaposed with superlative fielding helped Punjab restrict the Warriors to a meagre 99 for nine.
கருத்தை எழுதுங்கள்