Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: டெல்லியை வீழ்த்திய ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

Posted by:
Published: Monday, April 8, 2013, 15:27 [IST]
 

ஐபிஎல் 6: டெல்லியை வீழ்த்திய ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
 

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் ஐபிஎல் 6வது தொடரின் லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் வீழ்ந்தது. பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றது. டெல்லி அணியை வீழ்த்திய இந்த இரு அணிகளும் இன்று ஜெய்ப்பூரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தான் அனியைப் பொறுத்தவரையில் முதல் போட்டியில் காயமடைந்த கேப்டன் டிராவிட் குணமடைந்துவிட்டார். அதேபோல் இன்றைய போட்டியில் வாட்சன் இணைந்து கொள்கிறார். இது அந்த அணிக்கு நல்ல பலமாக இருக்கும். ரகானே தொடக்கத்திலே ரன் குவிக்கத் தொடங்கினால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சில் கூப்பர், ஹாட்ஜ், சித்தாத் கை கொடுப்பார்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் காம்பீர் பார்மில் உள்ளார். காலிஸ், மனோஜ்திவாரி, யூசுப்பதான் பொறுப்புடன் ஆடினால் வலுவான ஸ்கோரை எட்டலாம். நரேன் பந்துவீச்சு நம்பிக்கைக்குரியது.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ராகுல் டிராவிட் (கேப்டன்), ஸ்டூவர்ட் பின்னி, அன்கீத் சவான், பிடல் எட்வர்ட்ஸ், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, பிராட் ஹாட்ஜ், அஷோக் மெனரியா, அஜிங்க்யா ரகானே, சஞ்ஜு சாம்சன், ராகுல் சுக்லா, ஸ்ரீசாந்த், பிரவீன் தாம்பே, ஷேன் வாட்சன், சாமுவேல் பத்ரி, அஜித் சாண்டிலா, கெவோன் கூப்பர், ஜேம்ஸ் பாக்னர், ஹர்மீத் சிங், பிராட் ஹாக், குசால் ஜனித் பெரேரா, சச்சின் பேபி, ஓவைஸ் ஷா, அமித் சிங், ஷான் டெய்ட், சித்தார்த் திரிவேதி, திஷாந்த் யாக்னிக்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கம்பீர் (கேப்டன்), லஷ்மிபதி பாலாஜி, மன்விந்தர் பிஸ்லா, பிராட் ஹாடின், ஜாக் காலிஸ், பிரெண்டன் மெக்கல்லம், இயான் மார்கன், யூசுப் பதான், பிரதீப் சங்வான், ஷமி அகமது, லஷ்மி ரத்தன் சுக்லா, மனோஜ் திவாரி, சரப்ஜித் லட்டா, ரஜத் பாட்டியா, தேவபிரதா தாஸ், இக்பால் அப்துல்லா, பிரெட் லீ, ரியான் மெக்லாரன், சுனில் நரைன், ஜேம்ஸ் பேட்டின்சன், சேனநாயகே, ஷாகிப் அல் ஹசன், ரியான் டென் டஸ்சேட்.

English summary
Rajasthan Royals will face Kolkata Knight Riders in the only match to be played today (Monday) in the Indian Premier League Twenty20 tournament here at the Sawai Mansingh Stadium.
கருத்தை எழுதுங்கள்