Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சூப்பர் மேட்ச்... சூப்பர் ஓவரில் பெங்களூரை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!

Posted by:
Published: Monday, April 8, 2013, 7:49 [IST]
 

ஹைதராபாத்: 6வது ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சூப்பர் ஓவரைக் கையில் எடுத்தனர் நேற்று நடந்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக.

இரு அணிகளும் மோதிய போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. முதலில் ஆடிய பெங்களூர் அணி 130 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அணியும் 20 ஓவர்களில் 130 ரன்களை எடுத்ததால் போட்டி டை ஆனது. இதையடுத்து முடிவை நிர்ணயிப்பதற்காக சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

சூப்பர் மேட்ச்...  சூப்பர் ஓவரில் பெங்களூரை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!

இதில் ஆளுக்கு ஆறு பந்துகள் வீசப்பட்டன. இதில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் காமரூன் ஒயிட் 2 அபாரமான சிக்ஸர்களை விளாசினார். பின்னர் ஆடிய பெங்களூர் அணியால் 15 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் ஹமுமா விஹாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 44 ரன்களை எடுத்திருந்தார்.

முன்னதாக ஆடிய பெங்களூர் அணியில் கேப்டன் விராத் கோஹ்லி 46 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 44 ரன்களையும் குவித்தனர். அதிரடி நாயகன் கெய்ல் கை விட்டு விட்டார். அவர் எடுத்தது ஒரு ரன் மட்டுமே.

பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியில் அக்ஷத் ரெட்டி 23 ரன்களையும், விஹாரி ஆட்டமிழக்காமல் 44 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் சங்கக்கரா 16 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

English summary
Sunrisers Hyderabad pulled off a nail-biting win over Royal Challengers Bangalore via the Super Over in their Indian Premier League (IPL 6) match here on Sunday night (April 7).
கருத்தை எழுதுங்கள்