Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிர்ச்சி தோல்வி

Posted by:
Published: Tuesday, April 9, 2013, 10:24 [IST]
 

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 6வது தொடரின் 8-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தது. வாட்சன், ரகானே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வாட்சன் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ரகானேயுடன், டிராவிட் இணைந்தார். ஆனால் இந்த இணையால் ரன்களை எடுக்க முடியவில்லை. 2 பவுண்டரிகளை அடித்த டிராவிட் 17 ரன்களில் அவுட் ஆனார். நிதானமாக ஆடி வந்த ரகானே 36 ரன்களில் அவுட் ஆனார்.. இருப்பினும் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய ஹாட்ஜ்-யாக்னிக் ஜோடி விறுவிறுவென ஸ்கோரை உயர்த்தியது. 137 ரன்களை எட்டிய போது யாக்னிக் ரன் அவுட் ஆனார். 46 ரன்களுடன் களத்தில் இருந்தார் ஹாட்ஜ். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பிரெட் லீ, பாட்டியா, சுக்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிர்ச்சி தோல்வி

பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய காம்பீர் முதல் ஓவரிலே சிக்ஸ் அடித்து ரசிகர்களை ஆராவாரம் செய்ய வைத்தார். அவருடன் களம் இறங்கிய பிஸ்லா 1 ரன்னில் அவுட் ஆனார். இதேபோல் கல்லீஸும் வந்த வேகத்திலேயே முதல் பந்தில் டக் அவுட் ஆனார். காம்பீருடன் ஜோடி சேர்ந்த திவாரி நிதானமாக விளையாடினர். 14 ரன் எடுத்த நிலையில் திவாரி அவுட் ஆனார். மோர்கன் களம் இறங்கினார். காம்பீர் 22 ரன்களில் திரிவேதியிடம் அவுட் ஆனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூசப் பதான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் கொல்கத்தா அணி தடுமாறியது. 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 19 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசி கூப்பர் மற்றும் திரிவேதி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சுக்லா 2 விக்கெட்டும், ஸ்ரீசாந்த் மற்றும் டைட் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

ஏற்கெனவே டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது நடப்பு தொடரில் 2-வது வெற்றியாகும்.

English summary
Rajasthan Royals maintained their impeccable 'home record' against Kolkata Knight Riders outclassing the defending champions by 19 runs to register their second successive victory in the Pepsi Indian Premier League at Sawai Mansingh Stadium in Jaipur on Monday
கருத்தை எழுதுங்கள்