Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கெய்ல் அதிரடி ஆட்டம்- கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்!

Posted by:
Updated: Saturday, April 13, 2013, 11:54 [IST]
 

கெய்ல் அதிரடி ஆட்டம்- கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்!
 

பெங்களூர்: நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் 12வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிஸ்லாவும் கேப்டன் காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணியைச் சேர்ந்த பிஸ்லா- காம்பீர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் பிஸ்லா 1 ரன் எடுத்த நிலையில் ஹென்றிக்யூஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் காம்பீருடன் ஜோடி சேர்ந்த காலிஸ் 16 ரன் எடுத்த நிலையில் வினய்குமார் பந்தில் அவுட் ஆனார். களத்தில் இருந்த காம்பீருடன் இணைந்த யூசுப் பதானும் 17 ரன்கள் எடுத்து விரைவில் ஆட்டம் இழந்தார். விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் காம்பீர் நிலைத்து ஆடி அரைசதத்தைக் கடந்து 59 ரன்களில் அவுட் ஆனார். காம்பீருக்குப் பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை அந்த அணி எடுத்தது.

155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த அகர்வால்- கெய்ல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கெய்ல் உடன் விராட் கோஹ்லி இணைந்தார். இருவரும் அதிரடியாக ரன்களைக் குவித்தனர்.. கோஹ்லி 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கெய்லுடன் டி வில்லியர்ஸ் இணைந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்களை அதிரடியாகக் குவித்தனர். 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.. கெய்ல் 85 ரன்களும், டி வில்லியர்ஸ் 22 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.

Story first published:  Friday, April 12, 2013, 11:18 [IST]
English summary
Royal Challengers Bangalore defeated Kolkata Knight Riders by eight wickets in their Indian Premier League (IPL) match here tonight.
கருத்தை எழுதுங்கள்