Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதல்- இன்றாவது வெல்லுமா டெல்லி டேர்டெவில்ஸ்?

Posted by:
Published: Friday, April 12, 2013, 14:35 [IST]
 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதல்- இன்றாவது வெல்லுமா டெல்லி டேர்டெவில்ஸ்?
 

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று அணிகளிடம் தோல்வியை சந்தித்திருக்கிற டெல்லி டேர்டெவில்ஸ் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு ஜெயவர்த்தனே தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சங்ககரா தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏற்கெனவே மோதி தோல்வியைடைந்திருக்கிறது.

ஆனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஷேவாக் களம் இறங்குவார் என்று நம்புவதாக டெல்லி அணியின் ஆலோசகர் சேகர் தெரிவித்தார். மார்னே மார்கல் வந்தபின் பந்துவீச்சு பலம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றவில்லை.

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. ஸ்டெயின், இஷாந்த் சர்மா, பெரைரா நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் சங்ககரா, கேமரூன் ஒயிட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரண்டு அணிகளும் வெற்றிக்காக நிச்சயம் போராடும்!

English summary
Time is running out for Delhi Daredevils. Having lost their first three matches in this year's league, and looking ragged and somewhat pedestrian, the team which dominated the league phases just a year back needs to win its home contest against Sunrisers Hyderabad on Friday.
கருத்தை எழுதுங்கள்