Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ரகளையான ஆட்டம்...ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது புனேவாரியர்ஸ்!

Posted by:
Updated: Monday, April 15, 2013, 14:23 [IST]
 

ரகளையான ஆட்டம்...ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது புனேவாரியர்ஸ்!
 

புனே: நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் லீக் போட்டியில் 13வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது புனே வாரியர்ஸ் அணி.

புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ராகுல் டிராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் குஷால் பெரேரா- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் பந்தே ஷாக்காக அந்த அணிக்கு இருந்தது. முதல் பந்தில் பெரேரா எல்.பி.டபிள்யூ. முறையில் டக் அவுட்டாகி வெளியேறினார். களத்தில் இருந்த ரகானேவுடன் கேப்டன் டிராவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ரகானே 30 ரன்கள் எடுத்திருக்கும்போது ராகுல் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் டிராவிட்டுடன் பின்னி இணைந்தார். அரை சதத்தைக் கடந்த டிராவிட் 54 ரன்களில் யுவராஜ்சிங் பந்தில் அவுட் ஆனார். பி்ன்னியும் 1 ரன்னில் யுவராஜ்சிங் பந்தில் அவுட் ஆனார். 20 வது ஓவர் முடிவில் ஹாட்ஜ் 22, பால்க்னர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காஅமல் இருக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது.

146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனேவாரியர்ஸ் அணியின் உத்தப்பா- பின்ச் களம் இறங்கினார்கள். இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துகளை நொறுக்கினர். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் ரேஞ்சில் அடிக்கத் தொடங்கினர்.புனே வாரியர்ஸ் அணி 4 ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது. அந்த அணி 5.5 ஓவரில் 58 ரன் எடுத்திருக்கும்போது உத்தப்பா 32 ரன்னில் அவுட் ஆனார். அவர் 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

பின்னர் பின்ச் உடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். பின்ச் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். மறுமுனையில் டெய்லர் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்ச் 64 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங்- மாத்யூஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து 18.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து புனே வாரியர்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தனர். யுவராஜ் சிங் 28 ரன்னுடனும், மாத்யூஸ் 1 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.இதனால் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் புனேவாரியர்ஸ் முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

Story first published:  Friday, April 12, 2013, 9:49 [IST]
English summary
Pune Warriors, after losing the first three games to Rajasthan Royals, have recorded their first win against them at the IPL.
கருத்தை எழுதுங்கள்